வாகன ஓட்டிகளின் அபாய நிலை! - கண்டு கொள்வார்களா அதிகாரிகள் !!

 

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் கவர்க்கல், ஐயர்பாடி, புதுதோட்டம், பாராளை ஆகிய பகுதிகளில் சாலைகளின் ஓரங்களில் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால் சாலையில் எதிரே வளைவில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 

மேலும் பனி மூட்டமும் அதிகளவில் உள்ளதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. எனவே அந்த புதர்களை வெட்டி அகற்றி சாலை நன்றாக தெரியும்படி வைக்க வேண்டும் என்றும் தேவையான இடங்களில் ரிப்லக்ஸன் ஸ்டிக்கர் மற்றும் சோலார் விளக்குகள் அமைக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.  .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திவ்யா குமார், வால்பாறை.

Comments