வீடு வீடாகப் புகுந்து பரிகார பூஜை என்று பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் கும்பல்..!

   -MMH 

   கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாமியார் வேடம் அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 4 பேர் கொண்ட சாமியார் கும்பல் திடீரென்று வீட்டுக்குள் நுழைந்து பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்களை பயன்படுத்தியுள்ளனர். அதற்கு அவர்கள் பணமும் கேட்டுள்ளனர். 

வீட்டில் இருந்தவர்கள் அவர்களைப் பற்றி தீவிரமாக விசாரித்தபோது அவர்கள் ஆந்திராவில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு பெயரைச் சொல்லி நீங்கள் ஆசிரமத்துக்கு கூட நன்கொடையாக பணம் அனுப்பலாம் என்றும் கூறியுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் ஆசிரமத்தைப் பற்றி விசாரிக்கையில் அப்படி ஒரு ஆசிரமம் அங்கு இல்லை என்று தெரிந்ததும் அவர்களை வெளியே போக சொல்லி இருக்கின்றனர். வெளியே சென்ற சாமியார் கும்பல் மீண்டும் வேற தெருவுக்குள் புகுந்து இதேபோல் செய்ததாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதை உடனே காவல்துறை கவனத்தில் எடுத்துக் கொண்டு இவர்களை அழைத்து விசாரிக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் . இதுபோன்ற புதுமையான மோசடி செயல் அப்பகுதியில் பெரும் பயத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-முகம்மது சாதிக் அலி.

Comments