புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் மற்றும் அடிப்படை திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா!!

  -MMH

  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு திடலில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு  புதிய குடியிருப்புகள் மற்றும் அடிப்படை திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. 

பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு  சமுதாய முதலீட்டு நிதியும்  வழங்க உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு துறை செயலர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

-ரமேஷ், வேலூர்.

Comments