அஜித் நடித்த சினிமா வசனத்துடன் ஓட்டப்படும் திமுக போஸ்டர்கள்!!

   -MMH 

  கோவையின் முக்கிய பகுதிகளில் அஜித் வசனத்துடன் கூடிய அரசியல் போஸ்டர்களை திமுகவினர் ஒட்டி வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் கோவை மாவட்டத்தில் திமுக சார்ந்த அரசியல் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டு வருகின்றன.

முன்னதாக திமுக மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் எம். எல். ஏ. , வுமான கார்த்திக்கின் புகைப்படம் இல்லாத போஸ்டர்களை மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுக. , வில் இணைந்த மகேந்திரன் ஒட்டினார்.

இது கார்த்தி தரப்பை கடுப்பாக்கியது. இதனிடையே மகேந்திரன் ஒட்டிய போஸ்டர்களில் அவரது முகத்தை மட்டும் மறைக்கும் அளவுக்கு சிறிய போஸ்டர்களை கார்த்திக் தரப்பு ஒட்டியது.

இரு தரப்புக்கும் போஸ்டர் மோதல் வெடித்திருந்தது. இந்த சூழலில், கோவையின் பல பகுதிகளில் மீண்டும் திமுக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் நடிகர் அஜித் நடித்த படத்தில் வரும் "தெறிக்க விடலாமா" என்ற வசனத்துடன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் , மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல் "கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்லை" என்ற வசனத்துடன் திமுக நிர்வாகிகளின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை குறிவைத்து அஜித் வசனத்துடனான போஸ்டர்கள் கோவையில் அதிக அளவில் ஒட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments