கொழுந்துவிட்டு எரிந்த கார்.. தீ வைத்த மர்ம நபர்கள்..!!

 

-MMH

      கோவை மாவட்டம் துடியலூர் பகுதிக்குட்பட்ட பண்ணிமடை யில் காருக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை. கோவை  துடியலூர் அருகே பன்னிமடை பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ்(வயது 47) இவர் அகில இந்து பாரத மகாசபை மாநில இளைஞர் அணி தலைவராக இருந்து வருகிறார் இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தன் வீட்டின் முன் காரை நிறுத்தி இருக்கிறார். திடீரென்று ஓசையுடன் கார் தீப்பற்றி எரிவதைக் கண்ட சுபாஷ் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைக்க முயற்சி செய்து போராடி நெருப்பை அணைத்து இருக்கிறார். 

சம்பவ இடத்தின் அருகாமையில்  2 லிட்டர் கொள்ளளவு பாட்டில் ஒன்றையும் கண்டுள்ளார் உடனே இது குறித்து தடாகம் அவள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் 2 மர்ம நபர்கள் கையில் ஏதோ பொருளுடன் காரை நோக்கி வருவதும் பின்பு கார் வெடிப்பது போல் தீப்பற்றி எரிந்த உடன் அங்கிருந்து ஓடுவது போல் காட்சி பதிவாகி உள்ளதை வைத்து போலீசார் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் , சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக

-முஹம்மது சாதிக் அலி.

Comments