கோவை மாவட்டத்தில் கனமழை!! நொய்யல் வழித்தடத்தில் அமைந்துள்ள குளங்கள் நிறைந்தது!!

 -MMH

கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால், நொய்யல் வழித்தடத்தில் அமைந்துள்ள, 23 குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.கோவை மாவட்டத்தில் அக்., துவக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது.

நொய்யலில் பெருக்கெடுத்த வெள்ளத்தை, பொதுப்பணித்துறையினர் குளங்களுக்கு பிரித்து அனுப்பி வருகின்றனர். நொய்யல் வழித்தடத்தில் அமைந்துள்ள உக்குளம், புதுக்குளம், கோளரம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி, கங்கநாராயண சமுத்திரம், செங்குளம், கோவை பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி, வெள்ளலுார், செம்மாண்டாம்பாளையம் உட்பட, 23 குளங்கள் 100 சதவீதம் நிரம்பி விட்டன.நீலம்பூர் குளம், பேரூர் பெரிய குளம் ஆகியவை 95 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளன. 

கோவைக்கு குடிநீர் அளிக்கும் சிறுவாணி அணையின் மொத்த உயரம் 49.53 அடி. இதில் 44.65 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

அணை நீர் மட்டம் உயராமல் தடுக்க, அணைக்கு வரும் மழைநீரை கேரள பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.நேற்றைய நிலவரப்படி அணை மதகு 10 செ.மீ., உயரத்துக்கு உயர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பில்லுார் அணையின் மொத்த உயரம் 100 அடி. இதில் நேற்றைய நிலவரப்படி, 90 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் அக்.,1 முதல் நேற்று வரை 476 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இது, இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்யும் மழையை காட்டிலும், 106 சதவீதம் அதிகம்.

-சுரேந்தர்.

Comments