குடி மன்னர்களின் கூடாரமாக மாறி வரும் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டிடங்கள்! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?
கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள அக்காமலை பிரிவு என்னும் பேருந்து நிறுத்ததில் பயணிகள் நலனுக்காக நிழல் குடைக்காக கட்டிடங்கள் கட்டி உள்ளார்கள் .இவ்வாறு உள்ள பேருந்து நிறுத்த கட்டிடங்களில் இரவு நேரங்களில் குடி மன்னர்கள் மது குடிக்கும் கூடாரமாக மாற்றி வருகிறார்கள் மேலும் காலி பாட்டில்களும் சாப்பிட வாங்கி வந்த உணவு பொருட்களும் ஆங்காங்கே விட்டுச் சென்றும் அலங்கோல நிலையில் விட்டுச் சென்று விடுகின்றனர். பேருந்தில் ஏற வரும் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் எனவே இதற்கு தக்க நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யா குமார் (வால்பாறை,)
S.ராஜேந்திரன்.
Comments