கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பிரதீப்குமார் நியமனம்!!

   -MMH 

  கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதிலும் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

இதனுடைய சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த பிரதீப்குமார் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் திருச்சி எஸ்.பி.,யாக மூர்த்திக்கு பதில் சுஜித் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே கோவையில் பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-சுரேந்தர்.

Comments