தொடர் மழை காரணமாக கடும் சேதமடைந்த சாலைகள்! வாகன ஓட்டிகள் கடும் அவதி !! உடனடி நடவடிக்கை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!!!

   -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றிலும் அதிகளவு எஸ்டேட்கள் உள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன.

சோலையார் டேம் பகுதியில் உள்ள கல்யாண பந்தல் முருங்காளி, புதுக்காடு சேக்கல் முடி ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளன. இந்த சாலையின் வழியாக செல்லும் ஆட்டோ, கால் டாக்ஸி, அரசு பேருந்து ,பள்ளி மாணவ மாணவியரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், கனரக  வாகனங்கள் என அனைத்தும் அந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. 

இந்தச் சூழ்நிலையில் வாகனங்கள் சென்றுவர முடியாத அளவிற்கு சாலைகள் மிகவும் சேதம் அடைந்து உள்ளது இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளுக்குள் இறங்கி பழுதாகி அப்படியே நின்று விடுகின்றன இதுபோன்ற சூழ்நிலையில் மிகுந்த வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பள்ளி மாணவ மாணவியரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மிகவும் விரைவாக சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-S.ராஜேந்திரன்,  திவ்ய குமார் வால்பாறை.

Comments