நாளைய வரலாறு செய்தியின் எதிரொலி!! - நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறையினர்!! பொதுமக்கள் பாராட்டு!!
பொள்ளாச்சி ஆனைமலை வேட்டைக்காரன் புதூரில் இருந்து செமணாம்பதி செல்லும் சாலையில் கிழவன்புதூர் அருகே திசைகள் காட்டும் திசைகாட்டிகள் முட்புதர்கள் சூழ்ந்து மறைக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதை சுட்டிக்காட்டி கடந்த 16ஆம் தேதி திசை காட்டிகளை மறைத்து நிற்கும் முட்புதர்கள் திசைகள் தெரியாமல் திகைத்து நிற்கும் வாகன ஓட்டிகள்!! என்ற தலைப்பில் நமது நாளைய வரலாறு புலனாய்வு இதழில் ஆன்லைன் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
நமது செய்தியின் எதிரொலியாக இரண்டே நாட்களில் தீர்வு கிடைத்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து முட்புதரை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். அவர்களோடு நமது இதழின் சார்பாக நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-M.சுரேஷ்குமார்.
Comments