மூன்று பேர் சாவில் திடீர் திருப்பம்! மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது அம்பலம்! காவல்துறையினர் நடவடிக்கை!!!

   -MMH 

  கோவையில் 3 பேர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. குடும்பத்தினருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றதாக பெயிண்டர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

"மூன்று பேரும் இறந்ததற்கான சரியான காரணத்தை அறிய மாநகர காவல் துனைஆணையாளர் ஜெயசந்திரன் இ கா பா அவர்கள்நேரடி கண்கானிப்பில் காவல் உதவி ஆணையர்கள் திரு.சதீஷ் குமார் திரு. வின்சென்ட் அவர்களின் மேற்பார்வையில் சி 2 காவல் ஆய்வாளர் திரு. பிரபுதாஸ், காவல் உதவி ஆய்வாளர்கள் கள் திரு. ரஜினி காந்த், திரு.விக்னேஷ் ஆகியோர்  அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டதில் கிடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (வயது 57), பார்த்திபன் (35), சக்திவேல் (61). இவர்கள் பெயிண்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த 3-ந் தேதி இவர்கள் 3 பேரும் அங்குள்ள உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து மது குடித்தனர்.

மறுநாள் காலையில் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும் வழியில் சக்திவேல் திடீரென்று கீழே விழுந்தார். அவரை பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. இது போல் முருகானந்தம் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் வீட்டிற்கு செல்லும் வழியில் சுருண்டு விழுந்து இறந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த 3 பேரின் உடல்களை பரிசோதனை செய்ததில், அவர்கள் சயனைடு கலந்த மதுவை குடித்ததால், இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாநகர உதவி போலீஸ் கமிஷனர்கள் சதீஸ்குமார், வின்சென்ட் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் இறந்த 3 பேருடனும் ஒருவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் (63), பெயிண்டர் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், ராஜசேகர் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அவர், மற்றொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். முருகானந்தம் அந்த பெண்ணை அடைய முயன்றுள்ளார்.

இதற்காக அவர் அடிக்கடி அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் முருகானந்தம், தன்னுடைய நண்பர்கள் சக்திவேல், பார்த்திபன் ஆகியோருடன் ராஜசேகரின் வீட்டில் உள்ளவர்களுக்கும் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், முருகானந்தம் உள்பட 3 பேரையும் தீர்த்து கட்ட திட்டமிட்டார்.

அதன்படி சம்பவத்தன்று அவர், தன்னிடம் விலை உயர்ந்த வெளி நாட்டு மதுபாட்டில் இருப்பதாக  முருகானந்தத்திடம் கூறி உள்ளார். உடனே மதுகுடிக்கும் ஆசையில் முருகானந்தம், தனது நண்பர்கள் சக்திவேல், பார்த்திபன் ஆகியோருடன் சென்று ராஜசேகரை சந்தித்துள்ளார். அங்கு ராஜசேகர் மதுவில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார்.

அதை குடித்த 3 பேரும் சுருண்டு விழுந்து இறந்தது போலீசின் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜசேகர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு பயன்படுத்திய சயனைடு, மற்றும் மதுபாட்டில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்."

மேலும் இவ்ழக்கில் வேறு யாரும் குற்றவாளிகள் உள்ளனரா என்றும் புலன் விசாரனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இவ்வழக்கில் சிறப்பாக பனியாற்றிய தனிப்படையினர் பெரிதும் பாராட்டப்பட்டனர். என்று கோவை மாநகர காவல் துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது!!

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-S.ராஜேந்திரன், ஹனீப் கோவை.

Comments