சிங்கப் பெண் இவள் தங்கப்பன்..!! நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த பழங்குடியின மாணவி சங்கவி..!!!

-MMH

       நஞ்சபணுர் கிராமத்தில் பழங்குடியின மாணவி சங்கவி நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை. கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சபணுர் கிராமத்தைச் சேர்ந்த மலசார் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்கவி தான் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தில் கிராமத்தில் முதல் தலைமுறை மருத்துவராக நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் பிறந்த இந்த பழங்குடி மாணவி சங்கவி கடந்த முறை நீட் தேர்வில் 6 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்று வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறார். இருப்பினும் விடாமுயற்சியோடு படிச்சு கட் ஆஃப் மார்க்கு மேல் 220 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த இந்த மாணவி தன்னுடைய அனுபவத்தை கூறுகையில்:

.நான் மலசர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் எங்க கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. என்னுடைய உயர் படிப்புக்காக நான் ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக பட்ட இன்னல்கள் கொஞ்சமல்ல , ஜாதி சான்றிதழ் பெரும் போராட்டத்தில் ஊடகத்தின் வாயிலாகவும் அரசாங்கத்தின் பார்வையில் எங்கள் கிராமத்துக்கு மின்சாரமும், தார் ரோடு வசதியும் கிடைத்தது. இந்தப் போராட்ட சூழ்நிலையில் என் தகப்பனாரை இழந்தேன் இருப்பினும் கனத்த இதயத்தோடு விடாமுயற்சியோடு என்னுடைய தன்னம்பிக்கை என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறது. ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள மொபைல் போன் இல்லை, போன வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் சிலபஸ் மாறி இருந்த நிலையில் நீட் தேர்வுக்கான புத்தகம் வாங்குவதற்கு வசதி இல்லை இருப்பினும் என்னிடத்தில் இருந்த புத்தகங்களை வைத்து சில நல்ல உள்ளங்களின் உதவியோடு என்னால் சாதிக்க முடிந்துள்ளது. தாண் மருத்துவரானால் சமூக சிந்தனையோடு செயல்படப் போவதாகவும் தன்னைப்போல் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் தேவையான கல்வி கற்பதற்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் சங்கவி தெரிவித்துள்ளார். இவரது சாதனையை மக்களோடு மக்களாய் நாமும் பாராட்டுவோம் மேலும் இந்த மாணவி  கால் எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றி பெற்று உச்சத்தை தொட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments