அத்துமீறிய இளைஞர்!! அதிர்ச்சியில் பெற்றோர்!! ஆனைமலையில் பரபரப்பு!!

 -MMH

பொள்ளாச்சி ஆனைமலை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த கிரிநாத் (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்த நிலையில்   பெற்றோர் கிரிநாத்தை எச்சரித்து  கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி தன் வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்லும் பொழுது வழிமறித்த கிரிநாத் சிறுமியின் கன்னத்தைக் கிள்ளி வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்த நிலையில் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுது கொண்டு வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நடந்ததை கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.  இதைக்கேட்ட அதிர்ச்சி அடைந்த  சிறுமியின் தந்தை தனது நண்பனை அழைத்துக்கொண்டு கிரிநாத் வீட்டுக்குச் சென்று அவனை  தாக்கிய நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து கிரிநாத்தை  மீட்டனர்.  

பின்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிரிநாத் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்து கிரிநாத்தை சிறையில் அடைத்துள்ளனர். அதேசமயம் சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் தன்னை தாக்கியதாக கிரிநாத் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

M. சுரேஷ்குமார்.

Comments