உஷார்.. உஷார்.. பிச்சை எடுப்பது போல் நடித்து திருடும் பெண் கும்பல்...!!!

   -MMH 

    கோவை சரவணம்பட்டி பகுதியில் தொழிற்சாலைக்குள் புகுந்து பித்தளை பொருட்களை திருடிய  பிச்சை எடுக்கும் பெண்கள்.

சரவணம்பட்டி பகுதியில் உள்ள மணிகாரம்பாளையததில் உள்ள இருசக்கர உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் அப்துல் ஹக்கீம் . இவரது தொழிற்சாலை முன்பு  உணவு நேர இடைவெளியில் குழந்தைகளை வைத்துக்கொண்டு கும்பலாக வந்த பெண்கள் பிச்சை எடுப்பது போல் நடித்து தொழிற்சாலையின்  முன் ஷட்டர் வழியாக உள்ளே புகுந்து அங்கிருந்த பித்தளை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர் இந்த நிகழ்வை சிசிடிவி காட்சியின் மூலம் அறிந்த தொழிற்சாலை உரிமையாளர் ஹக்கீம்  சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபோல் மணிகாரம்பாளையம் பகுதிகளில் வீடு புகுந்து சில பெண்கள் திருடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. போலீசார் இதைப் பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

-சாதிக் அலி.

Comments