அய்யம்பேட்டை பகுதியில் எம்எல்ஏ ஆய்வு!!

   -MMH 
   பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை சரக வருவாய் கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடிந்த வீடுகளை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் இன்று பார்வையிட்டார். 

மேல வழுத்தூர், அய்யம்பேட்டை பாரதிதாசன் தெரு, மாகாளிபுரம், பசுபதிகோவில், மணல்மேடு, பசுபதி கோவில் நரிக்குறவர் காலனி, வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம் ஆகிய இடங்களை பார்வையிட்டார்.

மேலவழுத்தூரில் நிலவும் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் ஊராட்சியில் குப்பை கொட்டும் இட பிரச்சினை உள்ளிட்டவற்றை பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் விவாதித்தார்.

குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீரமாங்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு பள்ளி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கணபதி அக்ரஹாரம் மகாகணபதி தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பாபநாசம் வருவாய் வட்டாட்சியர் மதுசூதனன், திமுக பாபநாசம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் நாசர், அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் துளசி அய்யா, பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி துணை அலுவலர்கள், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மைதீன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் சலீம், அப்துல் ரஹ்மான்,  ஒன்றிய கவுன்சிலர்கள் ஆரிப், இராம பிரபு, பாபி சுதாகர், திமுக மாவட்ட பிரதிநிதி முபாரக், திமுக நிர்வாகிகள் புகழேந்தி, கருணாகரன், மைக்கேல் ராஜ், திருமலை நடராஜன்,  ரமணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாந்தி, நடராஜன், முபாரக் உசேன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

-ருசி மைதீன், தஞ்சாவூர்.

Comments