பொள்ளாச்சி டாஸ்மாக் கடைகள் முன்பு ஒட்டப்பட்டுள்ள பிளக்ஸ்.... ஊழியர்கள் கலக்கம்.!!

 

-MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்து வந்த நிலையில் டாஸ்மாக் முன்பு அரசு நிர்ணயித்த விலையை விட  அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களுடன் பிளக்ஸ் பேனர் சமூக ஆர்வலர்கள் சார்பாக  வைக்கப்பட்டுள்ளது.

இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் கலக்கம்  அடைந்துள்ள நிலையில்  மாதம் மாதம் சில கட்சியினருக்கும், சில அதிகாரிகளுக்கும் மாமுல் தரவேண்டிய கட்டாய நிலை உள்ளதால் தான் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக டாஸ்மாக் ஊழியர்கள்  புலம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments