கோவையில் நடமாடும் மருத்துவ முகாம்!!

   -MMH 

   பருவ மழையை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையின் சார்பில் நடமாடும் மருத்துவ முகாம் வாகனத்தை அரசு மருத்துவமனையில் டின் நிர்மலா துவக்கி வைத்தார்.

இந்த வாகனமானது கோவை மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகள் அனைத்திற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது இந்த நடமாடும் மருத்துவ முகாம் மூலமாக வயிற்றுப்போக்கு காய்ச்சலுக்கு ஓ.ஆர்.எஸ் மருந்து பாக்கெட்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் தீவிர தீவிர நோயாளிகளுக்கு கோவை அரசு மருத்துவமனை செல்ல அறிவுறுத்த படுவர்.

நடமாடும் மருத்துவ முகாம் வாகனம் முதற்கட்டமாக நேற்று உக்கடம் கரும்புக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முகாம் நடத்தப்பட்டது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments