வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் கூட்டம்! சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சி!!

 

   -MMH 

   வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக இந்த பகுதி முழுவதும் பச்சைபசேல் என்று பசுமையாக மாறி கண்களுக்கு மிகவும் ரம்மியமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் காட்டு யானைகளின் கூட்டங்கள் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் புகுந்து கூட்டம் கூட்டமாக நின்று கொண்டும் மேய்ந்து கொண்டும் இருக்கின்றன இதனை அந்தப் பகுதியில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்களும் பொதுமக்களும் மற்றும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த யானை கூட்டங்கள் பக்கத்தில் உள்ள எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுளைந்தாலோ அல்லது ரேஷன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை எடுத்து நாசப்படுத்தினாளோ அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள் என்று பொதுமக்கள் கருதுகின்றனர் எனவே இந்த யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள் 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-S.ராஜேந்திரன், 

திவ்யகுமார் வால்பாறை

Comments