வரத்து அதிகரிப்பால் மேட்டுப்பாளையம் வாழைத்தார் மார்க்கெட்டில் விலை குறைந்தது! விவசாயிகள் வேதனை! !

 

  -MMH

  மேட்டுப்பாளையம் அன்னூர் மெயின் ரோட்டில் காரமடை நால்ரோடு பிரிவு அருகில் வாழைத்தார் மார்க்கெட் உள்ளது. இங்கு புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடந்து வருகிறது. 

ஏலத்தில் மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 9 ஆயிரம் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வாழைத்தார் வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்து காணப்பட்டது. 

அதன்படி கதளி ஒரு கிலோ ரூ.27, நேந்திரன் ரூ.25, பூவன் ஒரு தார் ரூ.300, செவ்வாழை ரூ.150 முதல் ரூ.500, ரஸ்தாளி ரூ.150 முதல் ரூ.400 வரை, ரொபஸ்டா ரூ.100 முதல் ரூ.280 வரை, தேன்வாழை ரூ.150 முதல் ரூ.400, மொந்தன் ரூ.50 முதல் ரூ.175 வரையும் விற்பனையானது. 

வாழைத்தார் விலை குறைந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.  மேட்டுப்பாளையம் அன்னூர் மெயின் ரோட்டில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், மற்றும் பிற காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தது. 

ஏலத்தில் முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரையும், கேரட் ரூ.20 முதல் ரூ.45, பீட்ரூட் ரூ.20 முதல் ரூ.32, முள்ளங்கி ரூ.10 முதல் ரூ.20, பீன்ஸ் ரூ.30- ரூ.50, சிவப்பு முட்டைக்கோஸ் ரூ.15-ரூ.30, டர்னிப்ஸ் ரூ.15-ரூ.30, நூல்கோல் ரூ.15-ரூ.25 என விற்பனையானது

மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியில் நடந்த ஏலத் தில் நீலகிரி உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.750 முதல் ரூ.1,350, திம்பம் உருளைக்கிழங்கு ரூ.700-ரூ.900, குஜராத் உருளைக்கிழங்கு ரூ.750-ரூ.800, ஆசன் உருளைக்கிழங்கு ரூ.800-ரூ.900, கோலார் உருளைக்கிழங்கு ரூ.900-ரூ.1,100 வரை விற்பனையானது.

மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு 1,500 மூட்டை வெள்ளைப்பூண்டு விற்பனைக்கு வந்திருந்தது. நீலகிரி மாவட்டத்தில் சீசன் முடிவடைந்து விட்டதால் இதன் வரத்து குறைந்து காணப்பட்டது. எனவே ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.140 வரை விற்பனையானது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

- S.ராஜேந்திரன்.

Comments