கோட்சே நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தல்!!

   -MMH 

   தமிழ்நாட்டில் கோட்சே நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.

"தேசத்தந்தை மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சே 1949 நவம்பர் 15ல் குற்றம் நிரூபிக்கப்பட்டு அரியானா மாநிலம் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டான். 

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடைந்து இந்திய நாட்டிற்குக் காந்தி தேசம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் கோரிக்கை வைத்தார். அந்த அளவிற்கு மகாத்மா காந்தியைப் போற்றும் தமிழகமண்ணில் கோட்சே தூக்கிலிடப்பட்ட  தினத்தில் திருப்பூர் சிவசேனா அலுவலகத்தில்யுவ சேனா அமைப்பின் சார்பில் வீரவணக்க நாள் கொண்டாடி இருப்பது வன்மையாகக்கண்டிக்கத்தக்கது. 

சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் தமிழகத்தின் சமூக நல்லிணக்க பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கும் வகையிலும் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் தமிழகத்தின்  தத்துவார்த்த சிந்தனையைச் சிதைக்கும் முயற்சியாகும். 

இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கடும் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இது போன்ற செயலை இனி யாரும் செய்யக்கூடாது என்கிற உணர்வைத் தமிழக அரசும் காவல்துறையும் ஏற்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள்கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ளார்.

-ருசி மைதீன் தஞ்சாவூர்.

Comments