விபத்தில் காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய பெண் ஆய்வாளர்..!! குவியும் பாராட்டுகள்..!!

   -MMH 

  இரண்டு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய பெண் ஆய்வாளர்!

அன்னூர் சாலை வழியே மேட்டுப்பாளையத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்  சென்று கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்புக்காக போலீஸ் வாகனத்தில் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யாவும் அவ்வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது நித்யாவின் வாகனத்துக்கு முன்னே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன், மனைவி நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் கீழே விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே காவல் ஆய்வாளர் தன் வாகனத்தில் இருந்து இறங்கி அப்பெண்ணை சாலையோரமாக கொண்டு சென்று முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் உயிரைக் காப்பாற்றினார். பெண் காவல் ஆய்வாளரின் இந்த செயல் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகமது சாதிக் அலி.

Comments