கள்ளிச்செடிகளை விற்றும் வருமானம்!! - நிரூபித்து காட்டியுள்ளார் பள்ளி ஆசிரியை!!

    -MMH 

   கோவை:'கள்ளிச்செடிகளை விற்றும் வருமானம் பெற முடியும்' என்று நிரூபித்து காட்டியுள்ளார், கோவை வடவள்ளியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஷேமலதா.எம்.எஸ்சி., எம்.பில்., பட்டம் பெற்ற தாவரவியல் ஆசிரியையான இவர், ஆன்லைன் மூலமாக அலங்கார செடிகளையும், அவற்றின் விதைகளையும் விற்பனை செய்கிறார்.

முதன்மையாக இவரது விற்பனையில் இடம் பெறுபவை கள்ளிச்செடிகளே.இவரது வீட்டில் தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மூன்று தளங்களில், கண்களை கவரும் பல வகை கள்ளிச்செடிகள் இருக்கின்றன.''செடி வளர்க்கும் ஆர்வத்தை தாத்தாவிடம் இருந்து பெற்றேன். தாயார், கணவர் ஆதரவோடு ஏழாண்டுகளுக்கு முன் விற்பனையில் இறங்கினேன்,'' என்கிறார் ஷேமலதா.மேலும் அவர் கூறியதாவது:தாவரவியல் படித்த நான், அதை பயன்படுத்தி பகுதி நேரமாக வருமானம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வீட்டில் அலங்காரச்செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். என்னிடம் இப்போது கள்ளிச்செடிகளில் மட்டும் ஆயிரம் வகைகள் இருக்கின்றன. நானே விதை உற்பத்தியும் செய்கிறேன்.வீடுகள், அலுவலகங்களில் உள் அலங்காரம் செய்ய விரும்புவோர் பலரும் கள்ளிச்செடிகளையும், அவற்றின் விதைகளையும் விரும்பி வாங்குகின்றனர்.இவ்வாறு, ஷேமலதா கூறினார்.கள்ளிச்செடிகளின் மூலமும் வருமானம் பெற முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கும் ஷேமலதா பாராட்டுக்குரியவரே.வீட்டுக்குள்'குளுகுளு'இந்த செடிகள் வீட்டுக்கு அழகு சேர்ப்பதுடன், மனதுக்கும் இதம் அளிக்கின்றன.கொரோனா ஊரடங்கு காலத்தில், இவற்றின் விற்பனை அமோகமாக இருந்தது. கள்ளிச்செடிகள், அதிக பராமரிப்பு தேவையற்றவை. வெப்பத்தை கிரகித்து வீட்டுக்குள் குளுகுளு சூழலை உருவாக்கும் தன்மை கொண்டவை. மின்னணு சாதனங்களில் இருந்து வரும் கதிர்வீச்சையும் கிரகித்துக் கொள்பவை.

-சுரேந்தர்.

Comments