இருசக்கர வாகன திருடர்களை விரட்டி பிடித்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளரை பாராட்டி தமிழக முதல்வர் வாழ்த்து மடல்..!!..
கோவை மாவட்ட சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் அவர்களின் வீர தீர செயலை பாராட்டி முதல்வர் அவர்கள் வாழ்த்து மடல் வழங்கினார்.
சட்ட ஒழுங்கை கெடுக்கும் வகையில் சவால் விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கும் வகையில் கோவை மாநகர போலீஸார் துரிதமாக இரவும் பகலும் செயலாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூர் பைபாஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தை திருடி வந்த இரண்டு திருடர்களின் ஒருவனை சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் அவர்கள் விரட்டி கட்டிப்புரண்டு பிடித்த சம்பவம் அரங்கேறியது . இதனைப் பாராட்டி தமிழக முதல்வர் அவர்கள் ஆய்வாளர் அவர்களுக்கு அவரின் இந்த செயல் நேர்மையாக சுயநலமற்ற நாட்டுக்கு தன்னை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு சீருடைய பணியாளர்களுக்கும் ஒரு நல்ல உதாரணம் என்றும் திருடர்களை விரட்டிப் பிடித்த இந்த வீர தீர செயலை செய்த ஆய்வாளர் அவரை மனதார பாராட்ட கடமை பட்டுள்ளதாகவும் முதல்வர் தனது வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார். ஆய்வாளர் அவர்கள் இருசக்கர வாகன திருடர்களை பிடித்த செய்தி நாளை வரலாறு பத்திரிகையில் சிசிடிவி வீடியோ காட்சியுடன் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-முகமது சாதிக் அலி.
Comments