பிஎஸ்ஐ கட்டாய ஹால்மார்க் சட்டத்தில் உள்ள சிக்கல்களை சரி செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் !! - கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை!!

   -MMH 

    கோவை: பிஎஸ்ஐ கட்டாய ஹால்மார்க் சட்டத்தில் நுகர்வோரிடம் பெறப்படும் பழைய நகைகளை பதிவு பெற்ற வியாபாரிகளுக்கு விற்க மத்திய அரசு வழிவகை செய்து தரவேண்டும் என்று கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 15வது பொது மகாசபை கூட்டம் கோவை தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கொரோனாவின் தொற்று பரவாமல் இருப்பதற்கும் மனித சமுதாயத்தை காக்கவும்  தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது, 90 சதவீத மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி உலக சாதனை படைத்து தமிழக மக்களைக் காத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, நுகர்வோரின் பாதுகாப்பு கருதி கட்டாய ஹால்மார்க் சட்டத்தை அமல்படுத்தி சாதனை புரிந்த மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்,மத்திய அரசின் இந்த கட்டாய ஹால்மார்க் சட்டத்தை தங்கள் சங்கத்தினர் வரவேற்பதாகவும் இருந்தபோதிலும் இதில் உள்ள சிக்கல்களை களைய மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அதன்படி பிஎஸ்ஐ கட்டாய ஹால்மார்க் சட்டத்தில் நுகர்வோரிடம் பெறப்படும் பழைய நகைகளை பதிவு பெற்ற வியாபாரிகளுக்கும், தங்கம் சுத்திகரிக்கும் ஆலைக்கு விற்கவும் மத்திய அரசு வழிவகை செய்து தரவேண்டும் என்று கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் அவர்  வலியுறுத்தினார். மேலும் கோவையின் புராதான வர்த்தக பகுதியான ராஜவீதி,பெரிய கடைவீதி  மற்றும் டிகே மார்க்கெட்டில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்து  செல்ல போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தர வேண்டும் என்றும் முத்துவெங்கட்  கோரிக்கை விடுத்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments