திருப்பதியில் கடும் மழையின் காரணமாக தரிசனம் செய்ய இயலாதவர்கள் வேறு தேதியில் தரிசனம் செய்ய மாற்று ஏற்பாடு!!


    -MMH 

   திருப்பதியில் கடும் மழையின் காரணமாக தரிசனம் செய்ய இயலாதவர்கள் வேறு தேதியில் தரிசனம் செய்யலாம் - மாற்று ஏற்பாடு

கடந்த சில தினங்களாக திருப்பதியில் கடும் மழைப் பொழிவின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர்  வெள்ளம் போல் தேங்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.  

திருமலை திருப்பதி மலைப்பாதையில் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமான பக்தர்கள் பாதிப்புக்குள்ளாகினர் மேலும் திருமலையில்  மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருந்ததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

இந்த வெள்ள சேதங்களை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து தற்பொழுது  பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். முன்பதிவு செய்து    சாமி தரிசனம் செய்ய இயலாத பக்தர்கள்  வருகின்ற 6 மாத காலத்திற்குள் தயக்கமின்றி சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.  மேலும் வருகின்ற 25ஆம் தேதி முதல் 28 தேதி வரை மழை பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள  சூழ்நிலையில் முப்பதாம் தேதி வரை முடிந்த வரை பக்தர்கள் தங்களது பயணத்தை ஒத்தி வைக்குமாறு தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments