குடி குடியை மட்டுமா கெடுக்கும்...? நண்பனையும் கொள்ளும்..!!
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்துள்ள காந்திமாநகர் பகுதியில் வசித்து வருபவர் கருப்புசாமி இவரது மகன் அசோக் மனைவி கவுசல்யா வயது (28) ஆகியோர் ஒன்றாக வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று மது குடிக்க சென்ற அசோக், அங்கு ஏற்கனவே மது குடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் மணி என்கிற ஒர்க்ஷாப் மணி மற்றும் பிக் சண்முகம் ஆகியோர் அசோக் உடன் தகராறில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இதையடுத்து அருகே இருந்தவர்கள் அசோக்கை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர் இந்நிலையில் அசோக்கை பின்தொடர்ந்த ஒர்க் ஷாப் மணி மற்றும் பிக் சண்முகம் ஆகியோர் காந்திமா நகர் உலகளந்த பெருமாள் கோயில் அருகே உள்ள தனியார் பள்ளி முன்பு வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அசோக்கை குத்தியதில் நிலைகுலைந்த அசோக் தடுமாறி அங்கேயே விழுந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதை கண்ட இருவரும் தப்பி ஓடிய நிலையில் அசோக்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அசோக்கின் மனைவி கவுசல்யா இச் சம்பவத்தை பற்றி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொன்ற நண்பர்களின் இச்செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments