கோவையில் தற்போதைய கொரோனா நிலவரம் !!

 

-MMH

    கோவையில் நேற்று முன்தினம் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று 102 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 733 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 124 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 698 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

அத்துடன் நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனளிக்காமல் 29 வயது பெண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 58 வயது ஆண் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்தது. தற்போது 1,208 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-S.ராஜேந்திரன் .

Comments