உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட குறிச்சி பிரிவு கிளையின் ஆலோசனை கூட்டம். (26-11-2021) மஜக குறிச்சி அலுவலகத்தில் மஜக பொருளாளர் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமான ஆலோசனை  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் H.M.ஹனிஃபா ஆகியோர் கலந்துகொண்டு நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர்.

இக்கூட்டத்தில் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஹாரூன், மாவட்ட பொருளாளர் நோபல் பாபு, இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் ,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் A.K. சபிக், தகவல் தொழிநுட்ப அணியின் மாவட்ட செயலாளர் J.சிராஜ்தீன், கிணத்துக்கடவு பகுதி துணைச் செயலாளர் அக்பர் அலி, கிளைச் செயலாளர் அப்துல் சலாம், ஹரீப் மற்றும் கிளை உறுப்பினர்கள் பலரும்  கலந்து கொண்டனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments