இனிமேல் போலீஸுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு!! முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு!! நிம்மதியடைந்த போலீஸ்!!

 -MMH

காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில் சுழற்சி முறையில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசு நிகழ்ச்சிகள், முக்கிய தினங்களில் அசம்பாவீதம் நிகழாமல் இருக்க, விடுமுறையின்றி அவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல்துறையினர் பணிச்சுமை மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர்களுக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக புகார்கள் இருந்துவருகின்றன. மேலும் சில காவல்துறையினர் பணிச்சுமை காரணமாக பலர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

ஒருசிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். குறிப்பாக, தற்போது கொரோனா கால சூழலில் ஓய்வின்றி பணிகள் தொடர்ந்து இருந்துவந்தன.  இந்தநிலையில், காவல்துறையினருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும் காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவது வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது.  இதனிடையே, பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நாட்களில் காவலர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. 

இதைத் தொடர்ந்து, தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு, காவலர்களுக்கு இனி வார விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்தார். தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி,தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரவிட்டுள்ளார். 

மு.க. ஸ்டாலின் இன்று அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு. இடையறாது ஈடுபட்டு, சவாலான தமிழ்நாடு காவல் பணியில் பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காவல்துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-Ln இந்திராதேவி முருகேசன், சோலை ஜெய்க்குமார்.

Comments