சர்க்கரை நோய் தொடர்பான அனைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான ஒருங்கிணைந்த நவீன சிகிச்சை மையம்!!

   -MMH 

  சர்க்கரை நோய் தொடர்பான அனைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான ஒருங்கிணைந்த  நவீன சிகிச்சை மையம் கோவையில் துவங்கப்பட்டது.

மாறி வரும் உணவு பழக்கம் மற்றும் பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் தொடர்பான சிகிச்சைகளும் நவீனமாகி வரும் நிலையில்,சர்க்கரை நோய் தொடர்பான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான  டாக்டர் எஸ்.பி.டயாப்ட்டிக் பவுண்டேஷன் எனும் ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் துவங்கப்ட்டுள்ளது.

இதற்கான துவக்க விழாவில் ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் குமார் திறந்து வைத்தார். எஸ்.பி.டயாப்பட்டிக் பவுண்டேஷன் குறித்து அதன் இயக்குனரும், தலைமை மருத்துவருமான டாக்டர் சுகுணா பிரியா கூறுகையில்,தற்போது அதிகரித்து வரும் நீரிழிவு நோய் தொடர்பான அனைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு என இந்த ஒருங்கிணைந்த மையத்தை துவக்கி உள்ளதாகவும், குறிப்பாக இங்கு சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்,உடற்பயிற்சி முறைகள்,என அனைத்து விதமான ஆலோசணைகளுக்கும் பிரத்யேக மருத்துவர்கள் இருப்பதாகவும், மேலும் சர்க்கரை நோய் தொடர்பான அனைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக இந்த எஸ்.பி.டயாபடிக் ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். பேட்டியின் போது சரவணா பல் மருத்துவமனை தலைமை மருத்துவர் அரவிந்த் குமார், பிரபல மருத்துவர் P.C. ராஜு(சரவண சர்ஜரி)  உடனிருந்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments