மக்கள் பணியில் மீண்டும் மாஸ் காட்டிய பையா கவுண்டர்...!!மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை..!!!

   -MMH 

   ஜெம் கார்டன் அருகே மழைநீர் வரத்தால் அடித்துச் செல்லப்பட்ட தரை பாலத்தை உடனடியாக சரி செய்த பையா கவுண்டர்.

கோவை மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்குட்பட்ட இடிகரை பேரூராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக ஜெம் கார்டன்  அருகே உள்ள  தரைப்பாலம் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் உள்ளே விழுந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் உடனடியா இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு அதிகாரிகளுடன் விரைந்து வந்த கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் போர்க்கால அடிப்படையில் அப்பகுதி மக்கள் பயணிக்க தற்காலிக பாலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார் மேலும் மழைக்காலம் முடிந்து ஓடத்தில் நீர்வரத்து குறைந்த பின்னர்  நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதிகாரிகள் உடனே தற்காலிக பாலத்தை அமைத்து தந்தனர். 

தமிழ் தெரிவித்ததன் அடிப்படையில் விரைந்து வந்து பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டு பையா கவுண்டர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அத்திப்பாளையம் கிராமத்தில் உள்ள காமராஜர் நகர் தாழ்வான பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களையும் சேதமடைந்த வீடுகளையும் பார்வையிட்ட பையா கவுண்டர் அவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டு  மீண்டும் சீரமைத்து தரப்படும் என்றும் உறுதியளித்தார். பையா கவுண்டர் அவர்களின் இச்செயல் மக்களிடையே அவருக்குப் பெரும் வரவேற்பையும் நன்மதிப்பையும் கூட்டியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகம்மது சாதிக் அலி.

Comments