தைப் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

   -MMH 

  முதல்வர் திரு ஸ்டாலின் உத்தரவுப்படி உணவுத்துறை அமைச்சர் திரு சக்கரபாணி அவர்களின் அசத்தல்  அறிவிப்பு. பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி உணவுத்துறை அமைச்சர் திரு சக்கரபாணி  அறிவித்துள்ளார். இதன்படி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொருட்கள் விவரம்:

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவை இந்த 20 பொருட்களாகும். ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் இது வழங்கப்படுகிறது.

 இந்த அறிவிப்பு இரு மாதங்களுக்கு முன்னரேயே வெளியிடப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பொங்கல் நேரத்தில் கரும்பும் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் ரொக்க பணம் எதுவும் வழங்கப்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் 

நாளைய வரலாறு  செய்திக்காக,

-ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments