ஆழியாறு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கந்தசாமி எங்கே..?

 

-MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அழியாறில் டிரைவர் ஒருவர் அடித்துச்செல்லப்பட்டார். அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆழியாற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஆழியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது-. இந்த நிலையில் காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆழியாற்றின் பாலத்தில் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் கந்தசாமி (வயது 40) என்பவர் உட்கார்ந்து இருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென்று அவர் தவறி ஆற்றில் விழுந்தார். தண்ணீர் அதிகமாக செல்வதால் அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தேடி வருகின்றனர். நேற்று இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கந்தசாமியின் கதி என்ன? என்பது தெரியவில்லை. தேடும் பணி மீண்டும் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன். பொள்ளாச்சி.

Comments