பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை..!! போராடி மீட்ட வனத்துறையினர் வீடியோ காட்சிகளுடன்..!

-MMH

   துடியலூரில்  உள்ள கதிர் நாயக்கன்பாளையம் அருகே சிறிய பள்ளத்தில் விழுந்த குட்டி ஆண் யானை இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்ட வனத்துறையினர்.

கோவை துடியலூர் கதிர் நாயக்கன்பாளையம் CRPF பயிற்சி வளாகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு  தேடி வந்த குட்டி ஆண் யானை சில நாட்களாகவே மழையின் காரணமாக சேற்று பகுதியில் வலுகி சிறிய பள்ளத்தில் விழுந்தது. யானை தானாக எழுந்திருக்க முயற்சி செய்து முடியாமல் போராடியதை கண்ட CRPF காவலர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு இதைப் பற்றிய தகவல் அளித்தனர். 

தகவலின்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு பள்ளம் சரிசெய்யப்பட்டு முதுமலை புலிகள் வணக்கம் மருத்துவர் ராஜேஷ்குமார் , துணை மருத்துவ ராஜேஷ் , பெரியநாயக்கன்பாளையம் ரேஞ்சர் செல்வராஜ் அவர்களின் முன்னிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு புத்துணர்ச்சி அடைந்து யானை தானாக எழுந்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது. குட்டி யானையை பத்திரமாக மீட்க வனத்துறையினர் மற்றும் உதவியாக இருந்த CRPF காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் மேலும் வனப் பகுதிக்குள் சென்ற குட்டியானை கண்காணிப்பில் இருக்கும் என்று வனத்துறையினர் அறிவித்திருக்கின்றனர்.

நாளை வரலாறு செய்திக்காக

-முஹம்மது சாதிக் அலி.

Comments