சிங்கம்புணரி அருகே கோயில் ஜல்லிக்கட்டுகாளை இறப்பு! மூன்று கிராம மக்கள் சோகம்!!

    -MMH 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி உள்ள மேலவண்ணாரிருப்பு கோயில் காளை இறந்ததால் மூன்று கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். மேலவண்ணாரிருப்பு கிராமத்திலுள்ள செல்வவிநாயகர் கோயிலில் ஒரு ஜல்லிக்கட்டு காளை வளர்க்கப்பட்டு வந்தது. அந்தக் காளைக்கு வயது முதிர்ந்த காரணத்தால் நேற்று இறந்தது. 

அதனால் அந்தக் காளையின் மீது பேரன்பு செலுத்திவந்த மேலவண்ணாரிருப்பு, கீழவண்ணாரிருப்பு மற்றும் வெள்ளிக்குன்றம்பட்டி கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். இந்தக் காளை கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு ஊர்களில் நடந்த மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. 

காளை இறந்ததையடுத்து நேற்று ஊர் மந்தையில் மாட்டின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அலங்காரம் செய்யப்பட்டது. பல்வேறு  மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடு வாங்கிய பரிசு தொகை, பரிசுப் பொருட்கள் அனைத்தும் மாட்டின் அருகில் வைக்கப்பட்டு மூன்று கிராம மக்களின் சார்பில் வழிபாடு நடந்தது.

- அப்துல்சலாம்.

Comments