குண்டும் குழியுமான சாலையால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்!! சீர் செய்யப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

       -MMH 

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனை கண்டித்து பொது மக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் யாரும் இதுவரை கண்டுகொள்ளாமல் உள்ளனர் இதனால் இந்த பகுதி வழியாக செல்லக்கூடிய பஸ், லாரி ,ஆட்டோ, பள்ளிக்குழந்தைகளின் வேன் ஆகியவை மிகுந்த சிரமப்பட்டு இவ்வழியே சென்று வருகிறது.

இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் மேலும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் விரைவாக செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  

இது சம்பந்தமாக துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் அந்தப் பகுதியைச் சார்ந்த பொது மக்களே அவர்களால் முடிந்த அளவுக்கு சாலையை சீர் செய்து வருகின்றனர். எனவே சாலையை மிக விரைவாக சீர் செய்து கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன்., திவ்யா குமார், வால்பாறை.

Comments