முஸ்லிம் மகளிர் சங்கம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்! மாவட்ட ஆட்சியர் தகவல் !!

  -MMH

  கோவை மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் முஸ்லிம் மகளிர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. 

இந்த சங்கங்கள் மூலம் அந்தந்த மதங்களை சேர்ந்த ஆதரவற்ற, ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள், ஆதரவற்ற விதவைகள் சிறுதொழில் செய்திட தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பெண்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு தேவையான உதவிகள் அந்தந்த சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த சங்கங்கள் மேலும் சிறப்பாக செயல்படும் விதமாக அந்தந்த மதங்களை சேர்ந்த சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களை சேர்ந்த சமூக பணிகளில் ஆர்வமாக உள்ள தகுதியான நபர்கள், அவர்களின் மதம் சார்ந்த சங்கங்களின் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். 

எனவே விருப்பம் உள்ளவர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் தங்களது விண்ணப்பங்களை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments