கோவை மாநகர காவல்துறையின் பத்திரிக்கை செய்தி!!

   -MMH 

  கோவையில் கடந்த 12-11- 2021 ஆம் தேதி கோவை மாநகரம் பி4 உக்கடம் காவல் நிலைய பகுதியில்  வசித்து வந்த தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பயின்ற 17 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோவை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மேற்கில் போக்சோ சட்டம்  2012 படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

போக்சோ சட்டம்  2012 சட்டப்பிரிவு 23 மற்றும் அதன் உட்பிரிவுகளின் படி பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர் முகவரி புகைப்படம் குடும்ப விபரங்கள் பள்ளி சுற்றுப்புறம் அல்லது குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வழிவகுக்கும் பிற விபரங்கள் உட்பட குழந்தையின் அடையாளத்தை எந்த ஊடகத்திலும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது அவ்வாறு வெளியிட்டால் அது தண்டிக்க கூடிய  குற்றமாகும்

இந்நிலையில் மேற்படி வழக்கு சம்பந்தமாக பல்வேறு சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் பத்திரிகைகள் சுவரொட்டிகள் ஆர்ப்பாட்டங்களின் போது வைக்கப்படும் பிளகஸ் பேனர் போன்றவற்றில் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக அவரது புகைப்படம் முகவரி அவர் பயின்ற பள்ளி அவரது வீடு உள்ளிட்ட விலாசம் அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோக்கள் மற்றும் பல விபரங்கள் பகிர்ந்துள்ளனர்.

எனவே பத்திரிக்கைகள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தனி நபர்கள். அமைப்பைச் சார்ந்தவர்கள். மற்றும் ஊடகவியலாளர்கள். எக்காரணம் கொண்டும் போக்சோ சட்டப்பிரிவில் கூறியுள்ள வாறு பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வழிவகுக்கும் விபரங்கள் எக்காரணத்தைக் கொண்டும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தக் கூடாது என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது

என்று காவல் துறையின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments