ராஜஸ்தான் மாநிலத்தில் தொழில் துவங்க பல்வேறு சலுகைகளுடன் அழைப்பு!!

   -MMH 

   கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்ட தொழில் முனைவோர்களுக்கு ராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு கார்ப்பரேஷன் லிமிட்டெட் சார்பில், ராஜஸ்தான் மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்பு, 

கோவை அவினாசி சாலை, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள, தனியார் உணவக அரங்கில், ராஜஸ்தான் மாநில அரசின் சார்பில், தமிழக தொழில் முனைவோர்களுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் தொழில் அமைப்பதற்கான  அழைப்பு விடும் விதமாக, கோவை முதலீட்டாளர்களுடன் இராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி முதலீட்டாளர்கள்  வணிக சந்திப்பு  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மூத்த துணை மேளாளர்களான  எஸ் கே குப்தா, மற்றும் தருண் ஜெயின்,  ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின்   கோயம்புத்தூர்  தலைவர் ரமேஷ் பாப்னா, சிஐஐ அமைப்பின்  தலைவர் அர்ஜூன் பிரகாஷ், டை அமைப்பின் தலைவர் ரஞ்சனா சிங்கர், சேர் பர்சன் திருப்பூர் சேவா சமித்தி அமைப்பின் சார்பில் சம்பத் பிட்டி ஆகியோர், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தித்து பேசினர். அப்பொழுது அவர்கள் கூறுகையில்...

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது தொழில் தொடங்க பல்வேறு சலுகைகளை அம்மாநில அரசு வழங்குகின்றது, எனவும், இதனை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள முன்னனி தொழில் துறையினர் பயண்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை இந்த வணிக சந்திப்பின் வாயிலாக தெரிவித்து கொள்வதாகவும், இது கோவை, மற்றும் ஈரோடு பகுதியில் நடைபெறும் இரண்டாவது சந்திப்பு எனவும், முதல் சந்திப்பின் பொழுது பல்வேறு தொழில் துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் தொழில் தொடங்கி, தொழிலில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார், குறிப்பாக டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், மசாலா, ஆயில், போன்ற பல்வேறு தொழில் முனைவோர்களுக்காக அம்மாநில அரசு பல்வேறு சலுகைகளை ஏற்படுத்தி தர உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் வாயிலாக சுமார் 5000 கோடி ருபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர், பாலைவன நகரம் என்றழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில்  சுத்தமான காற்று, நீர்வளம், பணியாட்கள், அரசின் சலுகைகள் என பல்வேறு சலுகைகளை அளித்து முதலீட்டாளர்களை அம்மாநில அரசு  வழங்கி வருகின்றதாகவும், மேலும் தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு தேவையான, கடனுதவிகளை  வழங்க ராஜஸ்தான் மாநில வங்கிகளும் தயாராக உள்ளது எனவும், எளிய முறையில், பெறப்படும் கடனுதவிகளை திருப்பி செலுத்த பல்வேறு சலுகைகளை அளித்துள்ளதாக இந்த வணிக சந்திப்பின் வாயிலாக தெரிவித்தனர்,  முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தேவையான இடத்தை பெறும் பொழுதே அவர்களுக்கான அனைத்து விதமான அரசின் சார்ந்த சலுகைகளை அவர்களுக்கு வழங்கி வருகின்றதாகவும், 30 நாட்களில் நிறுவனத்தை நடத்த தேவையான அனைத்து உரிமங்களும் எந்த விதமான தோய்வும் இன்றி முதலீட்டாளர்களுக்கு ராஜஸ்தான் மாநில அரசு செய்து கொடுக்கும் எனவும், முதலீட்டாளர்கள் தங்களது உற்பத்தியை தொடர்ந்து கொண்டே மூன்று வருடத்தில்  நிறுவனத்திற்கு தேவையான அனைத்து, உரிமங்களை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தனர், இட பத்திரபதிவு, மின்இணைப்பு, பில்டிங் அப்ருவல்  உரிமம் பெறுவது, ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது,  நிறுவனத்தை பதிவு செய்வது, என அனைத்தையும் உற்பத்தி செய்து கொண்டே, விண்ணப்பித்து பெற்று கொள்ளும் வகையில் சலுகைகளை ராஜஸ்தான் மாநில அரசு தமிழக முதலீட்டாளர்களுக்கு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார், இந்த வணிக சந்திப்பு நிச்சயம் தொழில் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய வர்த்தகத்தை வளர்க்கும் என்று நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments