எதிர்வரும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை அளித்தனர்!!

   -MMH 

   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, திருப்பூர் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் உயர்திரு.இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனையின்படி எதிர்வரும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் விருப்பமனுவினை அளிக்க கடைசி நாளான இன்று ஏராளமானோர் தங்களது விருப்பமனுவினை மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளரும் தேர்தல் பொறுப்பாளருமான கே.ஈஸ்வரசாமி அவர்களிடம் கழக உடன்பிறப்புகள் அவர்களின் விருப்ப மனுவை அளித்தனர். 

இந்நிகழ்வில் உடன் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய சார்பு அணிகளின் நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர் உள்ளிட்ட பேரூர் கழக, வார்டு கழக, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments