அடிப்படை வசதிகள் செய்து தர கோரி கோவை ஆட்சியரிடம் SDPI கட்சியினர் மனு!!

  -MMH

  கோவை செல்வபுரம் 77வது வார்டு உட்பட்ட ரங்கசாமி காலனி, ராஜ ரத்தினம் நகர் உள்ளிட்ட இடங்களில் சூயஸ் குடிநீர் குழாய் பதிப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. என்றும் தற்போது மழைக்காலம் என்பதால் அங்கு பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மற்றும் பள்ளி செல்லும் சிறார்களும் அந்த சாலையை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள். என்றும் இதனை செப்பனிட்டு தார் சாலை அமைப்பதற்காகவும் இன்னும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்ற கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து எஸ்டிபிஐ சார்பாக மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் உமர் ஷரீப், , தொகுதி துணை தலைவர் ரபீக் , தொகுதி இணைச்செயலாளர் ஜாபர் , ரங்கசாமி கிளை தலைவர் சம்சுதீன், பெரிய தம்பி கிளை தலைவர் சவுக்கத்அலி, பேரூர் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்!

நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.

Comments