ஜனவரி 08 கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம்! கோவையில் மஜக மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!

  

    மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 08ஆம் தேதி அன்று சாதி,மத, வழக்கு, பேதமின்றி 10.ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.

அது தொடர்பான மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட அலுவலகத்தில் வைத்து கட்சியின் துணை பொதுச்செயலாளர் செய்யது அஹமது பாருக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணை பொதுச்செயலாளர் A.K. சுல்தான்அமீர்,  மாநில துணை செயலாளர் A.அப்துல் பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி,  Ikp மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் பங்கேற்று சிறைச்சாலை  முற்றுகை போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன்,  ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மஜீத், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சுல்தான், கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், கோவை வடக்கு மாவட்ட பொருளாளர் சேக் மைதீன், கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், கோவை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஆரிப் அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோவையில்_திரள்வோம், நீதியை வெல்வோம் என்ற முழக்கத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments