10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த நாளைய வரலாறு புலனாய்வு இதழ்..!! கேக் வெட்டி கொண்டாட்டம்..!!!

   -MMH 

   நாளைய வரலாறு புலனாய்வு இதழ் 10 லட்சம் ஆன்லைன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்ததை முன்னிட்டு இன்று 19.12.2021 போத்தனூரில் உள்ள இதழ் அலுவலகத்தில் ஆசிரியர், வெளியீட்டாளர், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் நிருபர்கள் என அனைவரும் இணைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆசிரியர் திரு . ஹாரூன் அவர்கள் இச்சாதனையை அடைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவருடைய நன்றியையும், நிருபர்களுக்கு பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் அடுத்த இலக்காக ஒரு கோடி பார்வையாளர்களை எட்டிப் பிடிப்பதே லட்சியமாகக் கொண்டு அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

-சாதிக் அலி.

Comments