5 கிலோ கஞ்சா, பணம் 2640, மூன்று செல்போன்களும் பறிமுதல்!

   -MMH 

  கோவையில் கஞ்சா வியாபாரி 2 பேர் கைது பணம், செல்போன்கள் பறிமுதல்! 

கோவையில் கஞ்சா வியாபாரி 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள இளங்கோ நகர் மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றனர்.

அப்போது போலீசாரை கண்டதும் அங்கு நின்றிருந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் கஞ்சா வியாபாரிகள் ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் இந்திரா நகரை சேர்ந்த ஜிஸ்னு(26), ஒலம்பசை சேர்ந்த சகாப்தீன்(46), ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, பணம் 2, 640, 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்!!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments