கோவை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 5 ஆயிரம் மருத்துவ கிட்டுகள்!!!

 -MMH 

கோவை அரசு மருத்துவமனையில்ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொடர்பான பரிசோதனை செய்ய 5-ஆயிரம் கிட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனா தினசரி பாதிப்பு சராசரியாக 100-ஆக குறைவாக உள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.

 இதனால் இந்தியா முழுவதும் கண்காணிப்பு, மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறையினர் தலைமைச் செயலர், சுகாதார செயலர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா கூறும் போது கோவையில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. இருப்பினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், ஒமிக்ரான் வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் அது வேகமாகப் பரவக்கூடிய தன்மையுள்ள வைரஸ் எனவும் தற்போது கூறப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவிற்கு செலுத்தப்படும், தடுப்பூசி எந்த அளவிற்குப் பாதுகாப்பு என்பது இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இந்த தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உள்ளது.

அதே போல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்குத் தான் அதிக பாதிப்பு மற்றும் இறப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 ஒமிக்ரான் பாதிப்பு கோவையில் இல்லை மக்கள் அச்சப்பட வேண்டாம், இருப்பினும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். டெல்டா வகை வைரஸ் தான் இரண்டாம் அலைக்குக் காரணம்.

அதன் மூலம் இந்த ஒமிக்ரான் மாற்றமடைந்துள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் பரிசோதனைக்குத் தேவையான வசதி உள்ளது. அந்த பரிசோதனையில் அறிகுறி கண்டறிந்தால், சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி உறுதி செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

 கோவையில் 5-ஆயிரம் பரிசோதனை கிட் தயார் நிலையில் உள்ளது என முதல்வர் நிர்மலா  தெரிவித்தார்.

நாளையவரலாறு  செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments