கோவையில் வெஸ்டர்ன் வேலி மற்றும் டீம் 55 ரேசிங் இணைந்து எம்.டி.பி சைக்கிளிங் போட்டி!!

 -MMH 

சாகசம் நிறைந்த எம்.டி.பி சைக்கிளிங் போட்டிகள் சமீபமாக கோவையில் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த போட்டிகளுக்கு அதிக வரவேற்பு இல்லாத சூழலில் தற்போது இப்போட்டிகளுக்கு கோவையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் பயிற்சி பெற்று போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் வெஸ்டர்ன் வேலி மற்றும் டீம் 55 ரேசிங் இணைந்து எம்.டி.பி சைக்கிளிங் போட்டிகள் நடத்தினர்.இன்று காலை 8 மணி முதல் இப்போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள்,பெரியவர்கள் என  அனைவரும் கலந்து கொண்டனர்.இந்த சைக்கிளிங் போட்டியை கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து துவங்கி வைத்தார். அதேபோல தொடர்ந்து நடைபெற்ற இருசக்கர வாகன பந்தயத்தை கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன்  மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தனர் மேலும் நல்லறம் முருகவேல், செல்வபுரம் பகுதி கழகம் அம்மா பேரவை பகுதி செயலாளர் எஸ் ஆர் குமார், ரோட்டரி மணிகண்டன், மகேந்திரன், ராஜேஷ், சீனி உள்ளிட்ட ஏராளமான   பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments