கோயபல்ஸின் 9 கொள்கைகள்!! இது யாருக்குப் பொருந்தும்னு எல்லாருக்கும் தெரியும்!! பீட்டர் அல்போன்ஸ் விளாசல்!!

 -MMH 

ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர் கோயபல்ஸ். ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும்வரை அதைப்பற்றி திரும்பத் திரும்ப உரக்கப் பேச வேண்டும் என்பது கோயபல்ஸின் தத்துவம்.

ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியொன்றில் காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, பாசிசத்தை மக்கள் மத்தியில் செயல்படுத்துவது குறித்த கோயபல்ஸின் 9 கொள்கைகளாக:

1. பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். அது மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை,

2. நாட்டில் என்ன நடந்தாலும் எதிர்க்கட்சிகளை குற்றம் சொல்லுங்கள்,

3. எவ்வளவு பெரிய தவறையும், தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரிலே நியாயப்படுத்த வேண்டும்,

4. ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்,

5. எல்லா விதமான உண்மைகளுக்கும், ஒரு பொய்க்கதையைப் புணைந்து அதை சமூகத்தில் உலாவ விட வேண்டும்,

6. தங்கள் கருத்துக்கு எதிராக இருப்பவர்களை எல்லாம் தேசத்துரோகிகள் எனச் சொல்ல வேண்டும்,

7. தம் இயக்கத்தில் உள்ள தலைவர்களை பொதுமக்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்,

8. அடிக்கடி பேரணி நடத்துங்கள். அடிக்கடி பெரும் திரள் கூட்டத்தை நடத்துங்கள்,

9. கடந்த காலப் பெருமைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள், எனப் பட்டியலிட்டார்.

மேலும், கோயபல்ஸின் கொள்கைகள் தற்போது யாருக்குப் பொருந்தும் என்பதை மக்கள் அறிவார்கள் எனவும் பீட்டர் அல்போன்ஸ் குறிப்பிட்டார்.

- ராயல் ஹமீது.

Comments