கோவை மாநகர காவல் துறையினர் புத்தாண்டு மற்றும் பண்டிகைக்கால வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி பொதுமக்களுக்கு அறிவுரை !!

-MMH

     கோவை மாநகர காவல் துறையின் சார்பாக பொதுமக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கவனத்துடன் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

புத்தாண்டை வரவேற்கும் அதே வேளையில் கொரொனா வைரஸ்ன்  புதிய வடிவான ஓமிக்ரான் வைரஸ்ன் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இரு முறை தடுப்பூசி போட்டு உள்ளார்கள் ஆனால் எந்த அறிகுறியும் இல்லாதவர்களாக அவர்கள் உள்ளார்கள்.

கடந்த 5 -12 -2022 ஆம் தேதியன்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட covid-19 வழிகாட்டுதலின்படி சமூக கலாச்சார மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மக்கள் கூட்டங்களில் பங்கேற்பதையும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல், மற்றும் உணவகங்கள், ஜவுளி கடைகள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லும்போது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் 

ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள், உள்ளரங்கு பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சார்பில் சானிடைசர்களை பராமரிக்கவேண்டும். பார்வையாளர்களுக்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் மற்றும் நுழைவு வாயில்களில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, பிறகு மக்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.

கோவை மாநகர காவல் துறை ஆனது மக்கள் அதிகம் கூடும் 9 இடங்கள் 13 முக்கிய சந்திப்புகள் 66 வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து பொது ஒழுங்கு மற்றும் அமைதியை பேணுவதற்காக அத்தகைய இடங்களில் காவல்துறையின் எண்ணிக்கையை பலப்படுத்த பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தடாகம் ரோடு, பாலக்காடு ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு,  மருதமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு ,சத்தியமங்கலம் ரோடு,  R.G. வீதி, வெரைட்டி ஹால் ரோடு, பூ மார்க்கெட் ரோடு, திவான்பகதூர் ரோடு ,மற்றும் பிற முக்கிய சாலைகள் ஆகிய இடங்களில் அதிக அளவில் போலீசாரைக் கொண்டு வாகன போக்குவரத்தும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

வெளியூரில் இருந்து நகருக்குள் நுழையும் எல்லைகளில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் வெளியாட்கள் கண்காணிக்கபட உள்ளார்கள். இதுதவிர 44 பைக் பீட்கள் மற்றும் 23 மொபைல் ரோந்துகள் முக்கிய சாலைகள், முக்கியமான மற்றும் பரபரப்பான பகுதிகளில் சுற்றி ரோந்து பணியில் ஈடுபட உள்ளார்கள் .

வாகன போக்குவரத்தை கண்காணிக்க 45 இடங்களை கண்டறிந்து உள்ளார்கள். அவ்விடங்களில் வாகனத்தணிக்கையை  பலப்படுத்தி நெருக்கடி இல்லாமல் வாகன போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது .

பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் .வாகன விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்படுவோரை மீட்க நகரின் முக்கிய இடங்களில் 4 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும்.

4 காவல் துணை ஆணையர்கள், 2 கூடுதல் துணை ஆணையர்கள், 13 உதவி காவல் ஆணையர், 38 காவல் ஆய்வாளர்கள் ,172 உதவி/ சிறப்பு உதவி ஆய்வாளர்கள்,522 காவலர்கள் மற்றும் இரண்டு அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 45 ஊர்காவல் படையினர் உள்ளிட்ட 1050 காவல்துறையினர் 2022ஆம் ஆண்டு புத்தாண்டு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பொதுமக்களும் காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதோடு புத்தாண்டு தின கொண்டாட்டம் குறித்த ஏதேனும் அசம்பாவிதம் அல்லது குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால்  அவற்றை உடனே கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண் :0422 2300970 மொபைல் எண் :9498181213. மற்றும் வாட்ஸ்அப் எண் 81900-00100

ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் தகவல் தருபவர்கள் பற்றிய விபரம் ரகசியம் காக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் புத்தாண்டு தினத்தை கொண்டாடுமாறு கோவை மாநகர காவல்துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments