சரவணம்பட்டி அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு...!! பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலம்...!!

   -MMH 

   கோவை மாவட்டம் சரவணம்பட்டி , சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாதி எரிக்கப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவை மாநகரையே உலுக்கிப் போட்டது. இந்நிலையில் சரவணம்பட்டி காவல்துறையினர் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது . இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணையை தொடங்கிய நிலையில் முத்துக்குமார் என்னும் நபரை கைது செய்துள்ளனர்.  சிறுமியின் தாயாருடன் நகை கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் சிறுமி நகையை எடுத்துக்கொண்டு மாயமானதாக நாடகமாடிய முத்துக்குமார் சிறுமியை கடத்தி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இச் சம்பவத்தில் கைதான முத்துக்குமார் இடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

-சாதிக் அலி.

Comments