கோவை காவல் ஆணையரிடம் மஜக துணை பொதுச் செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் புகார் மனு அளித்தார்!

   -MMH 

   கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சந்தித்தார், அவருடன் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர். 

இச்சந்திப்பில் சமீபத்தில் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நமது நாட்டின் முப்படை தளபதி, உட்பட 13 பேர்  மரணமடைந்தனர்.

இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த தனியார் யூடியூப் சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டு இருந்தது அதில் ராணுவ தளபதி மரணம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக அவதூறு செய்தியை பதிவிட்டிருந்தது.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கவும்,  மத , மோதலை தூண்டும் விதமாகவும் அவதூறு வீடியோ வெளியிட்ட இந்த யூடியூப் சேனல் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் அவர்கள் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் துரித நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR. பதுருதீன், ஹனீபா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஹாரூன் மாவட்டபொருளாளர் நெளபல் பாபு , ஆகியோர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments